தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் பாரதி தற்கொலை! - vellore news

தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் துரை மகாலிங்கத்தின் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 6, 2022, 7:23 PM IST

வேலூர்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவர் மறைந்து ஓராண்டுகளுக்கு மேல் ஆகிறது. துரை மகாலிங்கத்தின் மகள் பாரதி (வயது 55) இவர் தனது கணவர் ராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருடன் காட்பாடி காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தார்.

பாரதியின் கணவர் ராஜ்குமார் காட்பாடி சிக்ல்மில் பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் லத்தேரி அருகே பாரதி ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பாரதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில்,பாரதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் ஜொலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநில அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மூனு மாதத்தில் கசந்த காதல் கல்யாணம்: இளம்பெண்ணின் விபரீத முடிவு!

ABOUT THE AUTHOR

...view details