தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டிஸ்சார்ஜ்! - துரைமுருகன் உடல்நிலை

காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீடு திரும்பினார்.

துரைமுருகன்
துரைமுருகன்

By

Published : Dec 26, 2022, 8:27 AM IST

வேலூர்: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு சனிக்கிழமை இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காய்ச்சல் இருப்பதாகவும், மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற வேண்டும் அறிவுறுத்தியதாக தெரிகிறது. பின்னர் அமைச்சர் துரைமுருகன் நேற்று முழுவதும் சிகிச்சை பெற்றார். பின்னர் இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், ரயில் மூலம் சென்னையில் இருந்து வேலூர் திரும்பிய அவர், காட்பாடியில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இதையும் படிங்க:கோட்சேக்களின் வாரிசுகளுக்கு காந்தி வாரிசுகளின் பேச்சுகள் கசக்கத்தான் செய்யும் - மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details