வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, காட்பாடியில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் எழுதுபொருள் விற்கும் கடை நடத்திவருகிறர். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற அவர், இன்று வந்து பார்க்கும் போது கடையின் முன்பு வைத்திருந்து டேபிள் மற்றும் நாற்காலி திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து காட்பாடி காவல் நிலையத்தில் திருநாவுக்கரசு புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.