வேலூர் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் பாக்கித் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகத் தெரிகிறது. இது தொடர்பாக விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களைச் சந்தித்து மனு அளித்துள்ளனர். மனுவின் மீது அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போது விவசாயிகள் நிலுவைத்தொகையை உடனே வழங்கக்கோரி, வேலூர் மாவட்டம் அம்முண்டியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப்போராட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர்.
கரும்பு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பெருமாள் கூறுகையில், 'இந்த ஆண்டு கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய பாக்கித்தொகை ஐந்து கோடி ரூபாய் உட்பட மொத்தம் 32 கோடி ரூபாய் நிலுவைத்தொகை, விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் இருக்கிறது. இந்த நிலுவைத்தொகை வழங்கும் வரை, இங்கேயே காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்' என்றார்.
இது குறித்து தகவலறிந்து வந்த வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் கிரேஸ்லால் ரிண்டிகி பச்சாவு சம்பவ இடத்திற்கு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கரும்பு விவசாயிகளின் பிரச்னை இங்கு மட்டுமல்லா தமிழ்நாடு முழுவதும் உள்ளது.இதில் உயர் அதிகாரிகள் தான் முடிவு எடுக்க முடியும். என்னால் ஒன்றும் செய்ய முடியாது என அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். மேலாண் இயக்குனரின் பேச்சுவார்த்தையை ஏற்காமல் கரும்பு விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நீதிமன்றத்தில் சரணடைந்த திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையன்