வெடித்தது துணை காவல் ஆய்வாளரின் துப்பாக்கி: உதவி காவல் கண்காணிப்பாளர் விசாரணை! - Assistant Superintendent of Police
வேலூர்: துணை காவல் ஆய்வாளர் வைத்திருத்த கை துப்பாக்கி வெடித்ததால் இதுகுறித்து மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர் மாவட்டம், விருதம்பட்டு காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றுபவர் ஜெகதீசன். இவர் சிறப்பு காவல் பிரிவில் அங்கம் வகிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று(ஜன. 05) இரவு இவர் அலுவல் காரணமாக வேலூர் வடக்கு காவல் நிலையம் வந்துள்ளார்.
அச்சமயம் தனது அறையில் இருந்தபோது அவர் வைத்திருந்த 9mm கை துப்பாக்கியை அவர் சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்தத் துப்பாக்கி வெடித்து, கூரை மீது குண்டு பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயமோ, சேதமோ ஏற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து எதற்காக துப்பாக்கி வெடித்தது என்றும், எதேச்சையாக வெடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:இரவு நேரத்தில் திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்: பொதுமக்களிடம் குறைகேட்பு!