திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து துறைகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதனை மாவட்ட போக்குவரத்து ஆணையர் ஜவகர் தலைமை தாங்கி நடத்தினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவனருள், சார் ஆட்சியர் வந்தனாகர்க், மாவட்ட அனைத்துத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆய்வுக்கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் ஜவகர் கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப் பணிக்கான காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் ஆராய்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கப்படும்" என்றார்.
அனைத்துத் துறைகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மேலும், அனைத்துத் துறைகளின் சார்பில் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருவதாகச் சொன்ன அவர், திருப்பத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாதம் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படும் என உறுதிபடத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'வரும் 23ஆம் தேதி, சென்னையில் திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி'