பொதுவாக பனைமரங்களின் வேர்கள் மழை நீரை உறிஞ்சி சேமித்து வைக்கும் திறன் கொண்டவை. மேலும் மண் அரிப்பையும் தடுக்கும் தன்மை உடையவை. பனைமரத்தில் இருந்து பதநீர், பனை கிழங்கு, கருப்பட்டி, பனை விசிறி போன்ற இயற்கை முறையிலான பொருட்களை பயன்படுத்துவதும் குறைந்து விட்டதால், பனை மரங்கள் செங்கல் சூளைகளுக்கு விறகுக்காக அடியோடு வெட்டப்படுகின்றன. இதனால் பனை மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையும் சூழல் நிலவுகிறது.
அழிக்கப்படும் பனைகள் - வளர்க்கத் துடிக்கும் இளைய தலைமுறை!
வேலூர்: லாலாப்பேட்டை, ஏரிப்பகுதியில் இரண்டாயிரம் பனை விதைகளை விதைக்க மாணவர்கள் களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த லாலாபேட்டை ஏரிப்பகுதியில் தனியார் அமைப்பு, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இரண்டாயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை நடத்தினர். பனைமரங்களை வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அதனை அழிவிலிருந்து பாதுகாக்கவும் இந்த பணி நடைபெற்றது. அதேபோல், சுற்றுவட்டாரப் பகுதி ஏரிகளில் பத்தாயிரம் பனை விதை கன்றுகளை நடும் பணியில் ஈடுபடப்போவதாக அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அனைத்து கிராமங்களில் உள்ள ஏரிகளின் நிலத்தடி நீர் மட்டத்தைப் பெருக்க, ஏரிகளைச் சுற்றி பனை மரங்கள் நட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.