திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி தனியார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்றது. இதில் சென்னை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை தர்மபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த கைப்பந்து வீரர்கள் 27 அணிகளாகப் பங்கேற்று 2 நாட்களாக இரவு பகலாக விளையாடி வருகின்றனர்.
இப்போட்டியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று போட்டியைத் தொடங்கி வைத்து, வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு சார்பில் 4% வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் திட்டத்தை நிறைவேற்ற இருப்பதாக அறிவுரை வழங்கி, நன்றாக விளையாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.