தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டு நாக்கு அல்ல, இருபது நாக்கு' - ஸ்டாலின் - துரைமுருகன் விமர்சனம்

வேலூர்: 7 பேர் விடுதலை அண்ணா பல்கலைக்கழகம், காவிரி ஆணையம் உள்ளிட்ட பல விவகாரங்களில் இரட்டை நாக்கு அல்ல இருபது நாக்குகள் உடையவர் எடப்பாடி பழனிசாமி. என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.

dmk
dmk

By

Published : Nov 8, 2020, 1:28 AM IST

திமுகவின் 2021க்கான "தமிழகம் மீட்போம்" என்கிற சட்டப்பேரவை தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் இன்று (நவ. 07) வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வேலூர், திருப்பத்தூர், ஆம்பூர் ஆகிய இடங்களில் உள்ள திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

"ரத்து செய்யப்பட்ட வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டினார்கள் ஆனால் அவற்றை நாம் வென்று காட்டி பாடம் புகட்டியுள்ளோம். ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்க தகுதியற்ற அரசுதான் அதிமுக அரசு. ஜெயலலிதா இறந்ததாலும், சசிகலா சிறை சென்றதாலும், ஓபிஎஸ் தனியே சென்றதாலும் தான் எடப்பாடி முதலமைச்சரானார். காபி "கப்" பை தூக்கி எறிவது போல தமிழக மக்களை தூக்கி எறிபவர், முதலமைச்சர் பழனிசாமி.

குடியுரிமை சட்டத்திற்கு அதிமுக அரசு ஆதரவு தெரிவித்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. நீட் விவகாரம், 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு, 7 பேர் விடுதலை அண்ணா பல்கலைக்கழகம், காவிரி ஆணையம் உள்ளிட்ட பல விவகாரங்களில் இரட்டை நாக்கு அல்ல இருபது நாக்குகள் உடையவர் எடப்பாடி பழனிசாமி.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு

தமிழர்களின் மொழி கலாசாரத்திற்கு ஆபத்து வந்துவிட்டது, இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க பார்க்கிறார்கள். ஒரே மொழி ஒரே மதம் என மாற்ற நினைக்கிறார்கள் அதை ஒழிக்க வேண்டும்" என்றார்.

7 பேர் விடுதலை - துரைமுருகன் கருத்து

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் கூறுகையில், "ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. அண்மையில் கூட திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:'கஸ்டடி மரணங்களை மறைத்து தமிழ்நாடு காவல்துறையின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம்' - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details