தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியாத்தம் எம்எல்ஏ இறுதி ஊர்வலத்தில் ஸ்டாலின் பங்கேற்பு - gudiyatham mla ceremony

வேலூர்: குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியதோடு, இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றார்.

stalin-participates-in-gudiyatham-mla-final-ceremony
குடியாத்தம் எம்எல்ஏ இறுதி ஊர்வலத்தில் ஸ்டாலின் நடைபயணம்!

By

Published : Feb 29, 2020, 6:18 PM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் காத்தவராயன் உடல் நலக்குறைவால் நேற்று சென்னையில் காலமானார். இதையடுத்து அவரது உடல் அவர் சொந்த ஊரான வேலூர் பேரணாம்பட்டு பஜார் பகுதியில் உள்ள இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அவர் உடலுக்கு ஊர்ப் பொதுமக்கள், திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

குறிப்பாக திமுக பொருளாளர் துரைமுருகன், வணிக வரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, மாவட்ட ஆட்சியர் உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக காத்தவராயன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு இறுதி ஊர்வலத்தில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

குடியாத்தம் எம்எல்ஏ இறுதி ஊர்வலத்தில் ஸ்டாலின்

இதையும் படிங்க:குடியாத்தம் திமுக எம்எல்ஏ காலமானார்!

ABOUT THE AUTHOR

...view details