தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் பிரச்னை...ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இரண்டாம் கட்ட ஆய்வு - water scarcity

வேலூர்: சென்னைக்கு தண்ணீர் எடுத்து செல்வது தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அலுவலர்கள் இன்று இரண்டாம் கட்ட ஆய்வு நடத்தினர்.

ரயில் நிலையத்தில் அலுவலர்கள் இரண்டாம் கட்ட ஆய்வு

By

Published : Jun 26, 2019, 2:39 PM IST

சென்னையில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு தற்போது கடும் தண்ணீர் பஞ்சம் நிலவிவருகிறது. இதை சமாளிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை ரயிலில் சென்னைக்கு எடுத்து செல்ல தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அலுவலர்கள் இரண்டாம் கட்ட ஆய்வு

இது தொடர்பாக, ஆய்வு நடத்தி விரைவில் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் என அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்வது தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து இன்றும் அதிகாரிகள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்
.

ABOUT THE AUTHOR

...view details