ரயில்வே துறையில் பணியாற்றும் அதிகாரிகள் இந்தி அல்லது ஆங்கில மொழிகளில் தான் பேசவேண்டும். தமிழ் உள்ளிட்ட இதர மொழிகளில் பேசக்கூடாது என ரயில்வே நிர்வாகம் திடீரென உத்தரவிட்டது. இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதை அடுத்து அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது.
மொழி வற்புறுத்தலை எதிர்த்து எஸ்ஆர்எம்யூ போராடும்! - எஸ்ஆர்எம்யூ
திருச்சி: ரயில்வேயில் மொழி வற்புறுத்தலை எதிர்த்து எஸ்ஆர்எம்யூ போராடும் என துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் கூறினார்.
இந்நிலையில் ரயில்வேத் துறையின் இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.ஆர்.எம்.யூ. போராடும் என்று அதன் துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் திருச்சி பொன்மலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், " ரயில்வே ஊழியர்களின் நலனுக்காகவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் எஸ்ஆர்எம்யூ தொடர்ந்து போராடிவருகிறது. கோட்ட அளவில் மட்டுமின்றி இந்திய அளவிலும் போராடி பல சாதக உத்தரவுகளை எஸ்ஆர்எம்யூ பெற்றுள்ளது. ரயில்வே ஊழியர்களின் நலனுக்கு ஏற்ற வகையில் பல சாதக உத்தரவுகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் எஸ்ஆர்எம்யூ பணியாற்றி வருகிறது. ஆனால், இந்தி மொழி பேச வேண்டும், அந்த மொழி பேச வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தினால் அதை எதிர்த்து எஸ்ஆர்எம்யூ போராடும்" என்றார்.