வேலூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "தேவர் எங்களுக்கு தெய்வம். அவருடைய திருநீறை ஸ்டாலின் அலட்சியப்படுத்தியிருக்கிறார். தேவர் அய்யாவின் திருநீறு கிடைப்பது பாக்கியம்.
வன்முறையைத் தூண்டும் விசிக - அர்ஜூன் சம்பத்
வேலூர்: தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் வன்முறையைத் தூண்டி வருவதாக அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டினார்.
arjun sampath
தேவரின் திருநீற்றை கீழே கொட்டியதால் வருகின்ற தேர்தலில் ஸ்டாலின் ஜெயிக்கவே முடியாது. தோற்றுப் போவார். மனுதர்மத்தை அவமதித்து சாதி வன்முறையைத் தூண்டி வருகிறார், திருமாவளவன். அவருக்கு திமுக துணை நிற்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்முறையைத் தூண்டக்கூடிய கட்சி" என்றார்.
இதையும் படிங்க:வேல் யாத்திரை ஒரு அரசியல் நாடகம் - திருமாவளவன்