வேலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் இன்று(நவ. 25) மாலை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்திருந்த நிலையில். வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும் தலா 20 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
வேலூரில் உள்ள நான்கு மண்டலங்களிலும் சிறப்பு குழு - நிவர் புயல் பாதுகாப்பு மையம்
வேலூர்: நிவர் புயலை முன்னிட்டு வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும் தலா 20 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
Zone
மேலும் அதிகளவில் தண்ணீர் தேங்கினால் அவற்றை வெளியேற்ற எட்டு மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழைநீர் கூடிய பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். வேலூர் மாநகராட்சி ஒன்று, இரண்டாம் மண்டலத்திற்கு உட்பட்ட சாலைகளில் உள்ள கடைகள் முன் வைக்கப்பட்டுள்ள சிறுசிறு பேனர்கள் அகற்றப்பட்டது.