வேலூர்: ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவிகளுக்காக சக்தி அம்மா தலைமையில் சிறப்பு சரஸ்வதி யாகம் இன்று (பிப்.25) நடந்தது. இந்த நிகழ்வுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட பேனாக்களுக்கு சக்தி அம்மா சிறப்பு பூஜைகள் செய்து 3,000 மாணவர்களுக்கு வழங்கினார்.
அதன்பின் அவர் பேசியதாவது, ”மாணவர்களாகிய உங்களுக்கு பிடித்த சினிமா ஹீரோ ஒருவராவது இருப்பார். ஆனால், அவர்கள் நிஜத்தில் ஹீரோ இல்லை. நீங்கள் தான் நிஜ ஹீரோ. தன்னைப்போல் மற்றவர்களையும் உயர்த்த நினைப்பவர்கள் யாரோ, அவர்கள் தான் நிஜ ஹீரோ. சமுதாயத்தில் கல்வி மட்டுமே ஒருவரை வாழ்வில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
கல்வி மட்டுமே ஒருவருக்கு வறுமையை ஒழித்து நன்மை செய்ய முடியும். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு கல்வி தேவை அந்த சந்தர்ப்பம் உங்களுக்கு தற்போது கிடைத்துள்ளது. நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் நிஜ ஹீரோவாக வர வேண்டும். தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு பயம் வரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த யாகம் நடத்தப்பட்டு வருகிறது.