வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் ஆயிரத்து 553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், முதல் முறையாக வேலூர் மக்களவைத் தேர்தலில் பெண்களுக்கென தனி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலூரில் பெண்களுக்கென தனி வாக்குச்சாவடிகள்! - வாக்குப்பதிவு
வேலூர்: வேலூர் மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக பெண்களுக்கென தனி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதால் பெண்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
![வேலூரில் பெண்களுக்கென தனி வாக்குச்சாவடிகள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4044097-275-4044097-1564982259871.jpg)
பெண்களுக்கென தனி வாக்குச்சாவடிகள்
பெண்களுக்கென தனி வாக்குச்சாவடிகள்
அதன்படி, வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கென்று அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பெண்களை வரவேற்கும் வகையில் பலூன்கள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன.
இதையடுத்து, அங்கு வந்த பெண் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களுக்கென அமைக்கப்பட்டுள்ள தனி வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்து வருகின்றனர்.