தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பினால் கடும் நடவடிக்கை - வேலூர் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை!

வேலூர்: இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வண்டிகளில் சைலன்சர்களில் அதிக ஒலி எழுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிக ஒலி எழுப்பினால் கடும் நடவடிக்கை

By

Published : Apr 27, 2019, 8:48 AM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வேலூர் மாவட்டத்தில் சிலர் இரு சக்கர வாகனங்களில் உள்ள சைலன்சர்களில் அதிக சத்தம் வரும் வகையில் மாற்றம் செய்து, அதிக சத்தம் எழுப்பக் கூடிய வகையில் ஹாரன்களை பொருத்தி அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் பொது இடங்களில் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதால் அடிக்கடி விபத்துகளும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், பாதசாரிகளுக்கு எரிச்சலையும் ஏற்படுத்துவதாக தெரியவருகிறது. எனவே, அத்தகைய நபர்களை கண்டறிந்து வாகன ஓட்டிகள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இம்மாதிரியான வழக்குகளைத் தவிர்க்கும் பொருட்டு வாகன ஓட்டிகள் சைலன்சர்கள் மற்றும் ஹாரன்களில் மாற்றம் ஏதும் செய்யாமல் மோட்டார் வாகன விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை ஓட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details