தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய மாவட்ட காவல் அலுவலகம் திறப்பு விழா - டிஐஜி.காமினி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்

திருப்பத்தூர்: புதிய மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படை பயிற்சி மையம் ஆகியவற்றை டிஐஜி.காமினி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

புதிய மாவட்ட காவல் அலுவலகம் திறப்பு விழா
புதிய மாவட்ட காவல் அலுவலகம் திறப்பு விழா

By

Published : Dec 5, 2019, 2:51 PM IST

வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட திருப்பத்தூர் முதலமைச்சர் பழனிசாமி28ஆம் தேதி தொடங்கிவைத்தார்.திருப்பத்தூர் மாவட்டத்திற்கான புதிய மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படை பயிற்சி மையம் ஆகியவற்றை டிஐஜி.காமினி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகள், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், பேர்னாம்பட்டு முதலியனவாகும்.
நிர்வாக வசதிக்காக அதற்கான அரசு அலுவலர்கள் செயல்பட தற்காலிக இடங்களை தேர்வு செய்து அரசு அலுவலர்கள் அமைக்க வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது.

புதிய மாவட்ட காவல் அலுவலகம் திறப்பு விழா
இந்நிலையில் புதிய மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுத படை பயிற்சி மையம் ஆகியவற்றை டிஐஜி.காமினி குத்துவிளக்கேற்றி இன்று திறந்து வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details