தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலையில் தீ வைத்த சமூக விரோதிகளுக்கு வலைவீச்சு! - மலையில் தீ வைத்த சமூக விரோதிகளுக்கு வலை வீச்சு

வேலூர்: சமூக விரோதிகள் செயலால் கணியம்பாடி அடுத்த சிங்கிரி கோயில் மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.

மலையில்  தீ வைத்த சமூக விரோதிகளுக்கு வலை வீச்சு
மலையில் தீ வைத்த சமூக விரோதிகளுக்கு வலை வீச்சு

By

Published : Mar 3, 2021, 10:34 AM IST

வேலூர் அணைக்கட்டு தொகுதி வனச்சரகத்திற்கு உள்பட்ட கணியம்பாடி பகுதியில் உள்ள சிங்கிரி கோயில் என்னும் மலையில் நேற்று (மார்ச்2) மதியம் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டு மரங்கள் தீ பிடித்து எரிந்தன.

இது குறித்து அப்பகுதி மக்கள் வேலூர் சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் விரைந்து சென்ற வனத்துறை அலுவலர்கள் 5 பேர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு அதேபகுதியை சேர்ந்த 5 பேர் உதவி செய்தனர்.

மலையில் தீ வைத்த சமூக விரோதிகளுக்கு வலை வீச்சு

புற்கள் வெயிலால் காய்ந்திருந்ததால் முழுவதுமாக தீயை அணைக்க முடியவில்லை. சிங்கிரி கோயில் மலைப் பகுதிக்கு தீ வைத்த சமூக விரோதிகள் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து - தீயணைப்பு வீரர்கள் திணறல்

ABOUT THE AUTHOR

...view details