வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த தமிழ்நாடு வேளாண் பாதுகாப்பு இயக்கம்,. தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் நூதன முறையில் விழிப்புணர்வு மேற்கொள்ள ஆகஸ்ட்15ஆம் தேதி 10 ஆயிரத்து 890 சதுரஅடி கொண்ட மிகப்பெரிய தேசியக் கொடியை உருவாக்கியது. அதனை வேலூர் காவல்துறை மைதானத்தில் காவல்துறையினர் முன்னிலையில் நாட்டுக்காக அர்ப்பணித்தது.
விவசாயத்தைக் காக்க மாணவர்களின் புதிய முயற்சி - college stucents
வேலூர்: விவசாயத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் 10 ஆயிரத்து 890 சதுர அடி கொண்ட தேசியக் கொடியை உருவாக்கி தமிழ்நாடு வேளாண் பாதுகாப்பு இயக்கத்தினர் நூதன முறையில் மாணவர்களிடம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
national blag
இந்நிலையில், தமிழ்நாடு வேளாண் பாதுகாப்பு இயக்கத்தினர் ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று மாணவர்களை தேசியக் கொடியை கையில் ஏந்தி விவசாயம் குறித்த விழிப்புணர்வு பரப்புரையை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று வாணியம்பாடி இஸ்லாமிய ஆண்கள் கல்லூரியில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில், அக்கல்லூரியின் முதல்வர் மற்றும் தமிழ்நாடு வேளாண் பாதுகாப்பு அமைப்பைச் சார்ந்தவர்களும் மாணவர்களிடம் விவசாயம் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தனர்.