வேலூர் மாவட்டம் ஆர்.எஸ். நகரைச் சேர்ந்தவர் சாலமன். இவர் நேற்று (அக். 05) அடையாளம் தெரியாத நபர்களால் ஆட்டோவில் கடத்தப்பட்டார். பின்னர், அவரை வேலூர் மாநகராட்சி அருகே கொலை செய்த கும்பல், அவரது உடலை மாநகராட்சி அலுவலகம் அருகேயே வீசி விட்டுச் சென்றது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வேலூர் வடக்கு காவல் துறையினர், இந்த வழக்கில் தொடர்புடைய விஜய், பிரவீன்குமார், பிரபாகரன், ஐயப்பன், விக்னேஷ், மணிகண்டன் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.