வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தனிப் பிரிவு காவல்துறையினர் வாலாஜா டோல்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்தவர்கள் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர், அவர்கள் ஆறு பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் செங்கல்பட்டு பகுதியில் பல கொலை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என தெரிய வந்தது.
பல குற்றவழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது... - தனிப் பிரிவு காவல்துறையினர்
வேலூர்: வாலாஜாப்பேட்டை டோல்கேட் அருகே வாகன சோதனையின் போது, பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய ஆறு பேரைத் தனிப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், ரமேஷ் ( 36) சுமேஷ் (33 )கார்த்தி (24) இவர்கள் மூன்று பேரும் ஆந்திர மாநிலம் குடிப்பாலா பகுதியில் இரட்டை கொலை வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள். அமல்ராஜ் (34) பரத் (28) அப்துல்ரகுமான் (30) இவர்கள் மூன்று பேரும் செங்கல்பட்டு, உத்திரமேரூர், சேலையூர் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு கொலை, கொள்ளை வழிப்பறி வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆறு பேரும் தீவிர விசாரணைக்கு பின் செங்கல்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.