தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிராய்லர் கடை உரிமையாளரை கத்தியால் குத்திய ஆறு பேர் கைது ! - வேலூர் செய்திகள்

வேலூர்: மாவட்ட நீதிமன்றம் எதிரே பிராய்லர் கடை நடத்தி வருபவரிடம் பணம் கேட்டு மிரட்டி, கத்தியால் குத்திய ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பிராய்லர் கடை
பிராய்லர் கடை

By

Published : Nov 7, 2020, 3:47 AM IST

வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா. இவர் சத்துவாசாரியூலுள்ள வேலூர் மாவட்ட நீதிமன்றம் எதிரே பிராய்லர் கடை நடத்தி வருகிறார். கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தவரை நவம்பர் 2ஆம் தேதி அன்று கடைக்கு வந்த அடையாளம் தெரியாத சிலர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர் சாதிக் பாட்ஷா பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த கும்பல், சாதிக் பாட்ஷாவின் கை, தலை உள்ளிட்டப் பகுதிகளில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றது.

இந்நிலையில், குற்றத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க வேலூர் மாவட்ட எஸ்.பி செல்வகுமார் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கன்சால்பேட்டையைச் சேர்ந்த தயாலன்(23), ராணிப்பேட்டையைச் சேர்ந்த அஜித்குமார்(30), மேட்டு இடையம்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம்(25), தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த அருணாச்சலம்(20), சலவன்பேட்டையைச் சேர்ந்த சூரியபிரகாஷ்(20), கொணவட்டத்தைச் சேர்ந்த ரியாஸ்(39) ஆகிய ஆறு பேரை நேற்று(நவ. 06) கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் அனைவரும் பிரபல ரௌடி வசூர் ராஜாவின் கூட்டாளிகள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details