வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஜங்காலப்பள்ளி கிராம விவசாய நிலத்தில் நேற்று இரவு புகுந்த ஒற்றை காட்டுயானை விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களைச் சேதப்படுத்திச் சென்றது. இதையறிந்த, விவசாய நிலத்தில் காவல்புரிந்தவர்கள், வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
பின்னர் அவர்கள் வந்து, டார்ச் லைட், பட்டாசு, தீப்பந்தங்கள் ஏந்தி யானையை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அங்கிருந்து ஒற்றை காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்றது.