வேலூர் மாவட்டம் குடியாத்தம், ஆந்திர தமிழ்நாடு எல்லையோரமுள்ள டி.பி.பாளையம் கிராமத்தில் சமீபத்தில் ஒற்றை யானை மின்வேலியில் சிக்கி உயிரிழந்து அதே இடத்தில் புதைக்கப்பட்டது. உயிரிழந்த யானையுடன் வந்த மற்றொரு யானை, ஏற்கன்வே ஒரு யானை இறந்த இடத்திற்க்கு இரவு நேரத்தில் வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. இதனால், குடியாத்தம் வனத்துறையினர் டி.பி.பாளையம் பகுதியில் இரவு நேரங்களில் முகாமிட்டிருந்தனர்
இந்நிலையில்,நேற்று மீண்டும் ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை, விவசாய நிலங்களை சேதப்படுத்தியுள்ளது. இதையடுத்து, உடனடியாக வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்டினர். மேலும் ஒற்றை யானை அனுப்பூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. அதனை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்