திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள கூத்தாண்ட குப்பம் கிராமத்தில் வருகின்ற 31ஆம் தேதி எருது விடும் திருவிழா நடைபெற இருந்தது. இப்பகுதியில் எருது விடும் திருவிழாவானது கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்றது.
இந்நிலையில் 31ஆம் தேதி நடக்கும் எருது விடும் திருவிழாவிற்கு திருப்பத்தூர் உதவி ஆட்சியரிடம் அனுமதி கோரி பொதுமக்கள் விண்ணப்பித்தனர். அதற்கு அவர் அப்பகுதியின் அருகில் ரயில்வே தண்டவாளம் உள்ளதால் வேறு இடத்தில் நடத்திக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை இதனை அடுத்து காலங்காலமாக இந்தப் பகுதியில்தான் எருது விடும் திருவிழா நடத்தி வருகிறோம் எனவும் ஆகையால் இந்த பகுதியில்தான் அனுமதி தரவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கூறி திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், இதற்கு அனுமதி வழங்காவிட்டால் தங்களுடைய குடியுரிமை சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை ஒப்படைத்துவிடுவோம் எனவும் கூறிச் சென்றனர்.
இச்சம்பவத்தினால் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:அரசு நெல் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி முற்றுகைப் போராட்டம்