தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியாத்தம் அருகே பைக் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தின் பதைபதைக்க வைக்கும் காட்சி! - குடியாத்தம் அரசு மருத்துவமனை

குடியாத்தம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதியதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 27, 2023, 4:24 PM IST

குடியாத்தம் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தின் பதைபதைக்க வைக்கும் காட்சி!!

வேலூர்: குடியாத்தம் ரயில்வே மேம்பாலம் அருகே வேலூரில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த அரசுப்பேருந்து பெட்ரோல் பங்க்கில் இருந்து அதிவேகமாக சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த குடியாத்தம் அம்மணாங்குப்பம் துர்க்கை நகர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான ராஜலிங்கம் (வயது 20) மற்றும் அரவிந்த் குமார் (வயது 20) ஆகியோர் படுகாயம் அடைந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அரசுப்பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: வேலூரின் பாரம்பரியமான இலவம்பாடி முள் கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு!

ABOUT THE AUTHOR

...view details