தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபோதையில் 42 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை; 24 வயது இளைஞர் கைது! - Thiruppathur sexually harassing woman

திருப்பத்தூர்: மது போதையில் 24 வயதுள்ள இளைஞர் ஒருவர், 42 வயதுள்ள பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

manikandan
manikandan

By

Published : Dec 16, 2019, 4:31 AM IST

திருப்பத்தூர் மாவட்டம், பேராம்பட்டு அடுத்த கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி கீதா (42) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை அதே பகுதியைச் சேர்ந்த பலராமன் என்பவரின் மகன் மணிகண்டன் (24) என்ற வாலிபர் மதுபோதையில், கீதா வீட்டிற்குச் சென்று தண்ணீர் கேட்டு உள்ளே நுழைந்துள்ளார்.

வீட்டிற்குள் மணிகண்டன் நுழைந்ததும், பின்னர் கீதாவை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் கீதாவிற்கு உடம்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அந்தப் பெண் திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மதுபோதையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவர் கைது

புகாரின் பேரில் மணிகண்டனை கைது செய்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமைகள் குறித்து உளவியலாளர்களின் கருத்து என்ன?

ABOUT THE AUTHOR

...view details