வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்க நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சாம்ராஜ் (62). இவர், அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம் சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்தார்.
8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - முதியவர் கைது - வேலூரில் எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
வேலூர்: நாட்டறம்பள்ளி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த 62 வயது முதியவர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதியவர் கைது
சிறுமியின் அலறல் சத்தம் கேட்க அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், வீட்டிற்குள் சென்றனர். அப்போது சாம்ராஜ், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை பார்த்து பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். அதன்பின், சாம்ராஜூக்கு பொதுமக்கள் தர்மடி கொடுத்தனர்.
இதையடுத்து, திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சாம்ராஜ் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், முதியவர் சாம்ராஜை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.