தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த காமக்கொடூரன் போக்சோவில் கைது! - காமக்கொடூரன் போக்சோவில் கைது

வேலூர்: திருப்பத்தூர் அருகே பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

sampath

By

Published : Oct 3, 2019, 2:34 PM IST

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் ரேனுகா- கார்த்திக் தம்பதியினர். இவர்களது பத்து வயது சிறுமிக்கு அதே குடியிருப்பில் வசித்து வரும் திருமணம் ஆகாத சம்பத் (45) என்பவர் ஆள் இல்லாத நேரத்தில் அவ்வப்போது பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால், சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி வரவே, சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.

சிறுமிக்க பாலியல் தொல்லை தந்தவர் கைது

அச்சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த சம்பத் தனக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததை தெரிவித்துள்ளார்.இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அவர் மீது திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சம்பத்தை கைது செய்து விசாரிக்கையில் சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்தது உறுதியானது.

இதனையடுத்து, சம்பத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details