வேலூர் மாவட்டம் கருகம்புத்தூர் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் சிலர் கோழிக் கழிவுகளை தொடர்ந்து கொட்டி வந்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு பொதுமக்கள் முன்னதாக கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் அப்பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று (ஜுன். 22) அந்தப் பகுதிக்கு ஆட்டோவில் வந்த ஒருவர் கோழி கழிவுகளை கொட்டியபோது, அவரை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கையும், களவுமாக பிடித்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
இறைச்சிக் கழிவுகளை கொட்டிய நபர் மேலும் நெடுஞ்சாலையோரம் இறைச்சிக் கழிவுகளை கொட்டிய நபரின் சொந்த செலவிலேயே குப்பை முழுவதையும் சுத்தம் செய்யுமாறும் அவர்கள் வலியுறுத்தினர். அதன்பேரில் ஜேசிபி இயந்திரம் கொண்டு சம்பந்தப்பட்ட நபர் கோழிக் கழிவுகள் முழுவதையும் சுத்தம் செய்தார்.
இதையும் படிங்க: ஏடிஎம்-ல் நூதன முறையில் கொள்ளை