நாடாளுமன்ற கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் துவங்க உள்ள நிலையில், மத்திய அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும், பொதுமக்கள் கேட்க விரும்பும் துறை சார்ந்த கேள்விகளையும், வேலூர் மக்களவை தொகுதி மேம்பாடு, திட்டங்கள், அரசு பணிகள் குறித்த கேள்விகளையும் தனது வாட்ஸ்அப் எண் மற்றும் மின் அஞ்சல் மூலம் கேள்விகளை அனுப்பிவைத்தால் பொதுமக்கள் சார்பாக இக்கூட்டத்தொடரில் அந்த கேள்விகளை எழுப்புவேன் என வேலூர் எம்.பி., கதிர்ஆனந்த் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப்-இல் கேள்வி அனுப்புங்கள்; நாடாளுமன்றத்தில் கேட்கிறேன் - வேலூர் எம்.பி.,யின் புதுமுயற்சி! - கதிர்ஆனந்த்
வேலூர்: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தனக்கு மின் அஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் கேள்வி அனுப்ப வேலூர் மக்களவை உறுப்பினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
send-question-on-whatsapp-i-ask-in-parliament-vellore-mps-innovation
மேலும், பொதுமக்கள் தங்களது கேள்விகளை 9444376666 என்கிற வாட்ஸ்அப் எண்ணிற்கும், velloremp@kathiranand.in என்கிற மின்னஞ்சல் முகவரியிலும் பதிவிடலாம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஓட்டுநரின் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை