வேலூர் அடுத்த மாங்காய் மண்டி பகுதியில் காவல் துறையினர் இன்று (மார்ச். 22) காலை வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூரிலிருந்து ஆரணி நோக்கிச் சென்று கொண்டிருந்த மினி லாரியை நிறுத்தி சேதனை செய்தனர்.
அதில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான ஒரு டன் குட்கா பொருள்களை கடத்திவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கடத்தி கொண்டுவரப்பட்ட குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனர்.