வேலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் அறிவுரையின்படி நேற்று (ஏப்.17) இரவு பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வேலூர் பறக்கும் படை, தாசில்தார், காட்பாடி தாலுகா வழங்கல் அலுவலர் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே சென்ற மினி வேனை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ஐந்து டன் அளவிலான ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் தினேஷ், வெற்றிவேல் ஆகிய இருவரையும் உணவுப்பொருள் பாதுகாப்பு துறையினர் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி வேனையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, வேலூர் அரசு தானிய கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
ஐந்து டன் ரேஷன் அரிசி பறிமுதல் - இருவர் கைது !
வேலூர்: சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ஐந்து டன் அளவிலான ரேஷன் அரிசியை உணவுப்பொருள் பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.
5 டன் ரேஷன் அரிசி
இதையும் படிங்க: