வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமாரின் உத்தரவின்படி, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரங்கநாதனின் தலைமையிலான காவலர்கள் நேற்று (செப். 21) இரவு பள்ளிகொண்டா சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
வேலூரில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்! - டாட்டா ஏஸ்
வேலூர்: காவலர்கள் வாகன சோதனையின்போது தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
அப்போது டாட்டா ஏஸ் வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தபோது, ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை (குட்கா, ஹான்ஸ், பான் மசாலா) கைப்பற்றினர்.கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் பறிமுதல்செய்யப்பட்டது.
மேலும், புகையிலைப் பொருள்களை கடத்திவந்த திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல், நகரைச் சேர்ந்த ஆறுமுகம், கோயம்பேடு பகுதி சிவன்கோயில் தெருவைச் சேர்ந்த மோகனவேல் ஆகியோரை கைதுசெய்தனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.