தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 21 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா வழியாக கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 21 டன் ரேஷன் அரிசி, சோதனைச் சாவடியில் தனிவட்டாட்சியர் குழுவினரால் கைப்பற்றப்பட்டது.

21 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
21 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

By

Published : Aug 6, 2021, 7:56 PM IST

வேலூர்: தமிழ்நாட்டில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு லாரி மூலம் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, ஆட்சியர் குமாரவேல் பாண்டியனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அவரது உத்தரவின் பேரில், பறக்கும்படை தனி வட்டாட்சியர் கோட்டீஸ்வரன், மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான குழுவினர் நேற்று (ஆக. 5) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வேலூர் மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பத்தில், சந்தேகத்திற்க்கிடமாக சென்ற லாரியை பின் தொடந்து அலுவலர்கள் சென்றுள்ளனர். லாரியானது வேலூர் கிரீன் சர்க்கில், காட்பாடியை தாண்டி ஆந்திரா நோக்கி சென்றுள்ளது.

21 டன் ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்

இதனையடுத்து தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் அமைந்துள்ள கிருஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில், லாரி வழிமறித்து சோதனை செய்யப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா வழியாக, கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது.

இதனையடுத்து லாரியில் இருந்த 21 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. அலுவலர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க தப்பி ஓடிய ஓட்டுநரை, காட்பாடி காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:ஹெலிகாப்டர் சகோதரர்களை சிறையில் அடைக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details