தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1.5 டன் தடை செய்யப்பட்ட நெகிழி பறிமுதல் ! - Vellore Corporation Commissioner

வேலூர்: வேலூரில் நேற்று (பிப். 24) இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் 1.5 டன் தடை செய்யப்பட்ட நெகிழி பறிமுதல் செய்யப்பட்டு, ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

வேலூர் மாநகராட்சி ஆணையர்
வேலூர் மாநகராட்சி ஆணையர்

By

Published : Feb 25, 2021, 2:52 PM IST

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவின் பேரில் நேற்று (பிப். 24) மதியம் இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் சுண்ணாம்புக்கார தெருக்களில் திடீர் ஆய்வு செய்தனர்.

வேலூர் மாநகராட்சி ஆணையர்
கடந்த வாரம் காகிதப் பட்டறை ஆற்காடு ரோட்டில் பார்சல் சர்வீஸ் கடையில் இதேபோன்று தடை செய்யப்பட்ட நெகிழி பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது, எந்தெந்தக் கடைக்காரர்களுக்கு நெகிழி தரப்படுகிறது என்ற தகவல் பெறப்பட்டது.

அதன்பேரில் நேற்று சுண்ணாம்புக்கார தெருவில் முக்கிய மூன்று கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அச்சமயம் ஒரு கடையில் 1.5 டன் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் மதிப்பு ரூபாய் இரண்டரை லட்சம் ஆகும். மேலும் கடை உரிமையாளருக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:ரூ.883 கோடியில் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி பணிகள்!

ABOUT THE AUTHOR

...view details