தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 12, 2019, 9:12 PM IST

ETV Bharat / state

'வேலூரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக், குட்கா பறிமுதல்' - மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

வேலூர்: குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் குட்கா பொருட்களை வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் பறிமுதல் செய்தார்.

gutkha seized
gutkha seized

வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் குட்கா பொருட்கள் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கடந்த ஒரு வாரமாக உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள், வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

இதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்து வந்தனர். இந்நிலையில், வேலூர் சுண்ணாம்புக்காரத் தெருவிலுள்ள அஜிஸ் விடுதி கட்டடத்தில் நடைபெற்ற அதிரடி ரெய்டில், சுமார் 20 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் குட்கா பொருட்கள் சிக்கின.

சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையடுத்து அங்கு சென்ற வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அதிரடியாக குடோனை திறந்து உள்ளே இருந்த பிளாஸ்டிக் மற்றும் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், " தெருத்தெருவாக சென்று கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பிடிப்பதைவிட, யார் விற்பனை செய்கிறார்களோ அவர்களை குறிவைத்தோம். அந்த வகையில் இன்று சுண்ணாம்புக்காரத் தெருவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பிடிக்கப்பட்டது.

குட்கா பொருட்களை பறிமுதல் செய்த ஆட்சியர்

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த ரெய்டு நடைபெற்றுள்ளது. இன்று மாவட்ட உணவு வழங்கல் அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறை உள்ளிட்ட நான்கு துறைகள் இணைந்து சோதனை நடத்தினார்கள். 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள், ஒரு டன் குட்காவும் பறிமுதல் செய்துள்ளோம். இதன் மதிப்பு மொத்தம் 20 லட்சம் ஆகும். இதுவரை பிளாஸ்டிக் மட்டும் 15.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5 டன் பிடிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:ஹைதராபாத்தில் இ - ஆட்டோ சேவை அறிமுகம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details