வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் தீபலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
பாஜகவை வெளுத்து வாங்கிய சீமான்! - வேலூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தல்
வேலூர்: டிஜிட்டல் இந்தியா என்று கூறும் மோடியால் வேலூர் தேர்தல் முடிவை இரண்டு மணி நேரத்தில் அறிவிக்க முடியுமா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது பேசிய சீமான், ‘ஐம்பது நாட்களில் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்குவோம், நாட்டு மக்கள் அனைவரது வங்கியிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றெல்லாம் பாஜக தம்பட்டம் அடித்தது. ஆனால், தற்போது அவற்றையெல்லாம் மறந்துவிட்டு பாஜக அரசு செயல்படுகிறது. அது மட்டுமின்றி அப்படி கூறியதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? என்கிறார்கள்’ என வருத்தமாகக் கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், ‘நீங்கள் சொல்லும் டிஜிட்டல் இந்தியாதானே... வேலூர் மக்களவைத் தேர்தல் முடிந்த இரண்டு மணி நேரத்தில் தேர்தல் முடிவுகளை சொல்லுங்கள்’ எனவும் கேள்வி எழுப்பினார்.