வேலூர்: தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் கடந்த 6ஆம் தேதி அன்று முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று (அக்டோபர் 9) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இன்று (அக்டோபர் 9) வேலூர், அணைகட்டு, கணியம்பாடி ஆகிய மூன்று ஒன்றியங்களில், காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.
இம்மூன்று ஒன்றியங்களில் மொத்தம் 469 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்றியங்களில் ஐந்து மாவட்ட கவுன்சிலர்கள், 50 ஒன்றிய கவுன்சிலர்கள், 87 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 697 வார்டு உறுப்பினர்கள் என, மொத்தம் உள்ள 839 இடங்களுக்கு, இரண்டாயிரத்து 508 பேர் போட்டியிடுகின்றனர்.