தமிழ்நாடு முழுவதும் வணிக நோக்கத்திற்காக உரிய அனுமதியின்றி பல்வேறு குடிநீர் ஆலைகள் செயல்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில், அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உரிய அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகள் சீல் வைக்கப்பட்டு வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள 40 குடிநீர் ஆலைகளில் 37 குடிநீர் ஆலைகள் உரிய அனுமதி இல்லாமல் செயல்படுவது கண்டறியப்பட்டது. இவைகளுக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.