வேலூர் மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் 2020ஆம் ஆண்டிற்கான தணிக்கை கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் கடந்த டிசம்பர்18ஆம் தேதி நடைபெற்றது.
செஞ்சிலுவை சங்கத்திற்கு கீழ் இயங்கும் சேவ சமாஜத்தின் அறைக்கு சீல்! - Financial malpractice
நிதி முறைகேடு காரணமாக வேலூர் செஞ்சிலுவை சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் கீழ் இயங்கும் பெண் பணியாளர்கள் விடுதி மற்றும் சேவ சமாஜ அறைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில், சங்கத்தின் நிதிகளில் கண்டறியப்பட்ட முரண்பாடுகளால் மாவட்ட ஆட்சியருக்கு ஏற்பட்ட அதிருப்தியை தொடர்ந்து நிர்வாக குழுவைக் கலைப்பதாக ஆட்சியர் அறிவித்தார். அடுத்த, 15 நாட்களுக்குள் புதிய நிர்வாக குழுவைத் தேர்வு செய்ய வேண்டும். அது வரை சங்கம் மாவட்ட வருவாய் அலுவலர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என்றும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பழைய நிர்வாகிகள் சங்கத்தின் உள்ளே செல்ல கூடாது என்பதற்காக வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலகத்திற்கு வருவாய் அலுவலர் சீல் வைத்தார்.
இந்நிலையில் இன்று(டிச.21) வேலூர் செஞ்சிலுவை சங்கத்தின் கீழ் இயங்கும், வேலூர் கோட்டை சுற்று சாலையில் அமைந்துள்ள சேவ சமாஜத்தின் அறை மற்றும் காகிதப்பட்டறை பகுதியில் அமைந்துள்ள பெண் பணியாளர்கள் விடுதிக்கும் (Working Women Hostel) கோட்டாட்சியர் கனேஷால் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.
இதையும் படிங்க:’ஜனவரியில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்’: ஆட்சியர் செந்தில்ராஜ்