வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி வேட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த பீடி சுற்றும் கூலித்தொழிலாளி சென்றாயன். இவரது மகன் பிரேம்குமார் (15), அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவகுமாரின் மகன் பார்த்தசாரதி (15).
இருவரும் அப்பகுதியிலுள்ள வேட்டப்பட்டு அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்தனர். நடைப்பயிற்சி மேற்கொள்வதாகக் கூறி நேற்று காலை 5 மணி அளவில் இருவரும் வெளியே சென்றுள்ளனர்.
நீண்ட நேரம் ஆகியும், இருவரும் வீடு திரும்பாததால், சிறுவர்களுடைய பெற்றோர் உறவினர்கள் வீடுகளிலும் நண்பர்களின் வீடுகளிலும் தேடியுள்ளனர். பல இடங்கள் தேடியும் மாணவர்கள் கிடைக்காததால் அவர்களது பெற்றோர் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
10ஆம் வகுப்பு மாணவர்கள் மாயம் இந்தப் புகாரின் அடிப்படையில் நாட்டறம்பள்ளி காவல் துறையினர் மாயமான இரு மாணவர்களைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: முதியவரைக் கல்லால் அடித்துக் கொலைசெய்த இளைஞருக்கு ஆயுள்!