வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அருகே வசித்துவருபவர் பிரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆறாம் வகுப்பு படித்து வரும் இவர், உடல் நிலை சரியில்லாததால் அதே பகுதியில் உள்ள மணி மெடிக்கல்ஸ் என்ற மருந்தகத்திற்கு மருந்து வாங்கச் சென்றுள்ளார்.
அங்கு சென்ற மாணவியை, ஆந்திராவைச் சேர்ந்த மருந்தக உரிமையாளர் கார்த்திக்(24) என்பவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர், மாணவி வீட்டுக்குச் சென்று மயக்க நிலையிலேயே இருந்துள்ளார். இதையடுத்து, வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவியின் தாய், அச்சிறுமியிடம் விசாரித்தபோது, மருந்தகத்தில் நடந்தது தெரியவந்தது.