தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பேருந்து மோதியதில் மாணவன் படுகாயம்....மருத்துவமனையில் அனுமதி - அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

வேலூர் அருகே சைக்கிளில் பள்ளி சென்ற மாணவன் மீது அரசு பேருந்து மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாணவனுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு பேருந்து மோதி பள்ளி மாணவன் படுகாயம்; அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அரசு பேருந்து மோதி பள்ளி மாணவன் படுகாயம்; அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

By

Published : Sep 22, 2022, 12:41 PM IST

வேலூர்:குடியாத்தம் அடுத்த ஜீவாநகரை சேர்ந்த முனியப்பன் மகன் சுரேஷ்( 11 ) இவர் குடியாத்தம் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார்.

இதனிடையே நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்காக தனது வீட்டிலிருந்து சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். செதுக்கரை பகுதியில் சென்ற போது வேலூரில் இருந்து கே.ஜி.எப் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியதில் படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து மாணவன் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:புத்தகங்களுக்கு பதிலாக பட்டா கத்தியை தூக்கிய மாணவர்கள்...ரயிலில் அட்டகாசம்

ABOUT THE AUTHOR

...view details