திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் மார்கழி மாதம் முழுவதும் வீதிவீதியாக ராமர் விளக்குடன் பஜனை நடைபெற்று, மார்கழி மாத முடிவையொட்டி ராமர், சீதை அனுமன் சிலைகளுடன் திருவீதி உலா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் பஜனைகள் நடைபெற்று மார்கழி மாத நிறைவான இன்று ராமர் சிலை, சீதை சிலை, அனுமன் சிலைகள் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மாரியம்மன் கோயிலிலிருந்து ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு இறுதியாகக் கோயிலை வந்தடைந்தது.