ரயில்வே காவல்துறை தலைமை இயக்குநராக பணியாற்றும் சைலேந்திரபாபு ஐபிஎஸ், அரசுப் பணியைத் தவிர்த்து பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் மழைநீர் சேமிப்பை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பயணம் சென்றார்.
அதன்படி சென்னை பூந்தமல்லியிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு வந்த அவரை பொது மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை லயன்ஸ் கிளப் சார்பில், மழைநீர் சேமிப்பு குறித்து சைக்கிள் பயணம் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.