வேலூர்:குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட கொண்டசமுத்திரம் ஊராட்சி சார்பில் குடியாத்தம் நீதிமன்ற வளாகம் எதிரே இருந்து தனியார் கல்லூரி செல்லும் சாலையில் திமுக ஒன்றிய குழு தலைவர் சத்தியானந்தத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சாலையின் ஓரம் உள்ள ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை அகற்றாமல் சில இடங்களில் நூதன முறையில் கட்டிடங்களை துளையிட்டு அதற்க்குள் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டியுள்ளனர். இது குறித்த தகவல் சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவியது. மேலும், முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக கழிநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.