வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்நேத்தம்பாக்கத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான கிடங்கு ஒன்று செயல்படுகிறது. இந்த கிடங்கில் விற்பனை செய்யப்படும் அம்மா சிமெண்ட் விற்பனையில் முறைகேடு நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் லஞ்சஒழிப்புத் துணை கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில்கிடங்கில் சோதனை மேற்கொண்டனர்.
நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் இருந்து ரூ.50ஆயிரம் பறிமுதல் - ரூ.50ஆயிரம் பறிமுதல்
வேலூர்: ஆற்காடு அடுத்த மேல்நேத்தம்பாக்கத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத ரூ. 50ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
சோதனை மேற்கொள்ளும் லஞ்ச ஒழிப்புத்துறையினர்
அப்போது கணக்கில் வராத பணம் ரூ.50,600 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில், நுகர்பொருள் வாணிபக் கிடங்கு பொறுப்பாளர்அறிவழகன் பொதுமக்களிடம் சிமெண்ட் மூட்டைக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதும், விதியை மீறி கள்ளச்சந்தையிலும் சிமெண்ட் மூட்டைகளை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.