தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயிலில் கடத்தி செல்லப்பட்ட ரூ.4.25 லட்சம் பணம், 17 கிலோ வெள்ளி பறிமுதல் - etv bharat

புருலியா விரைவு ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.4.25 லட்சம் பணம், 17 கிலோ வெள்ளி கட்டிகள் ஆகியவற்றை ரயில்வே காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ரொக்கப்பணம் பறிமுதல்
ரொக்கப்பணம் பறிமுதல்

By

Published : Aug 4, 2021, 9:35 PM IST

வேலூர்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ’புருலியா’ (மேற்கு வங்கம்) விரைவு ரயில் நேற்று (ஆக.03) காட்பாடி ரயில்வே சந்திப்பு வந்தது.

அந்த ரயிலில் ரயில்வே காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான ஒருவரின் பையை எடுத்து பார்த்தனர். அதில் 17 கிலோ வெள்ளிக் கட்டிகள் மற்றும் ரூ.4.25 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது‌.

தொடர்ந்து எவ்வித ஆவணங்களுமின்றி அவைகளை ஒருவர் கொண்டு சென்றதால், ரயில்வே காவல் துறையினர் அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த ரவி (40) என்பது தெரியவந்தது.

தற்போது இவர் ஹவாலா கும்பலைச் சேர்ந்தவரா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:பெகாசஸ் விவகாரம் - 6 திருணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

ABOUT THE AUTHOR

...view details